தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சி மகத்தான வெற்றி பெறும் எனச் செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற பிரதான கட்சிகளின் குடும்பங்களிலேயே தவெக ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக தலைவர் விஜய் யாருக்கும் அடிபணிய மாட்டார் என்றும், விரைவில் மாநிலம் தழுவிய அளவில் அவரது தீவிரப் பிரச்சாரப் பயணம் தொடங்கும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
மற்ற கட்சிகளின் கூட்டணிகள் மக்களைச் சாராமல் இருப்பதாகவும், தவெக மட்டுமே மக்களோடு இணைந்து இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். சிபிஐ விசாரணை மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகாலத் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தவெகவின் தேர்தல் அறிக்கை அமையும் என்றும், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே விஜய் அறிவிப்பார் என்றும் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…