“கரூர் விவகாரத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு காரணம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக விஜய் உருவெடுத்துள்ளதால், அவரை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையான விசாரணை நடத்தியிருந்தால், இந்நேரம் தாம் சிறையில் இருந்திருப்பேன் என்றும், தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார். விஜய்யின் அரசியல் வருகையைத் தடுப்பதற்காகவே கரூர் சம்பவத்தை முன்னிறுத்தி அரசியல் சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக ஆதவ் அர்ஜுனா தனது உரையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…