ஒரே படத்தில் பேமஸ் ஆகி காணாமல் போன 5 நடிகைகள்.. கமலையே கையேந்த வைத்த “குணா” ரோஷினி..

By Ranjith Kumar

Published on:

சினிமாக்களில் எப்படி ஹீரோக்களுக்கு தனி மவுஸ் உண்டோ, அதேபோல் 1950 காலகட்டத்தில் இருந்து தற்போது 2024 வரை தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எப்படி இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தை பார்ப்பார்களோ, அதைப்போல் ஹீரோயின்களுக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளார்கள்! ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கும் கூட்டம் அலைமோதி கொண்டு திரையரங்கில் படத்தை பார்ப்பதற்கு பல கோடி ஜனங்கள் உள்ளார்கள். அப்படி ஹீரோயின்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் மாஸ் உள்ளது, ஆனால் ஒரே படத்தில் தனக்குப்பின் பெரும் ரசிகர் கூட்டத்தை கூட்டினாலும் அதன்பின் காணாமல் போன நடிகைகள் பல உண்டு, முதல் படத்திலேயே தன் நடிப்பாலும் அழகாலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி போட்டிருந்தாலும் தற்போது காணாமல் போன ஐந்து நடிகைகளை பற்றி பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் சிங்கம் புலி அவர்கள் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் ரெட். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை தான் பிரியா கில். இவர் ஷர்ப் டம், ஜோஷ் என்ற படங்கள் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி மலையாளம் தெலுங்கு நடிகர்களான மம்முட்டி ஷாருக்கான் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஹீரோயின்களாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் முதல் படத்திலிருந்து பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்து, அதன் பின் இவர் எந்த மொழியிலும் நடிக்காமல் தற்போது சினிமா துறையில் இருந்தே வெளியேறி விட்டார்

   

1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் விஜய், குஷ்பூ, ரம்பா என்று பலரும் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா என்ற படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர்தான் மோனிகா காஸ்டெலினோ. இவர் இதற்கு முன்னால் பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தமிழ் படம் மூலம் அறிமுகமாகி ஒரே படத்தில் மாபெரும் ஹிட் கொடுத்து, அதன் பின் சினிமா துறையில் இருந்தே வெளியேறி காணாமல் போய்விட்டார்.

ஒண்டு பிரேமாடா காதே என்ற படம் மூலம் அறிமுகமானவர்தான் “மானு”. அதன் பின் இவர் தெலுங்கு ஹிந்தி என்று பிரபல ஹீரோயினாக வலம் வந்தார். அதன் பின்னதாக 1998 இல் அஜித் நடிப்பில் சரண் அவர்கள் இயக்கத்தில் காதலன் மன்னன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, தனக்கென்று மாபெரும் ஒரு இடத்தை பிடித்திருந்தால், அதன் பின் சினிமா துறையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.

யாகை ஜல்வா என்ற சல்மான் கான் படம் மூலம் ஹிந்தியில் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தவர்தான் “ரிங்கெ கன்னா”. அதன் பின் வாய்ப்பு இல்லாமல் தமிழ் படமான 2001 ஆம் ஆண்டு ரவீந்திரன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த “மஜ்னு” படத்தில் பிரபல ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் சினிமா துறையில் வாய்ப்பு இழந்து தற்போது ஹவுஸ் வைஃப் ஆக வாழ்ந்து வருகிறார்.

1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “குணா”. இப்படத்தில் முதல் முதலில் சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமான “ரோஷினி” அவர்கள் முதல் படத்திலே தனக்கென்று பெரும் கூட்டத்தை சேர்த்தார், “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் இவர் பெயர் ஒலிக்க ஆரம்பித்தது, அந்த அளவுக்கு மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். ஆனால் தமிழ் படங்களில் வாய்ப்பை இழந்து ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்தார், ஆனால் அங்கேயும் ஹீரோயின் வாய்ப்பை இழந்து துணை கதாநாயக ஒரு சில படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகளை இழந்து சொந்த தொழில் செய்து வருகிறார்.

author avatar
Ranjith Kumar