தமிழ் சினிமாவில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப் படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வேதிகா கொள்ளையடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித்த மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கிய வருகின்றார்.
குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுக்களை பெற்றார். இவரின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழில் போதிய அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதிகா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய லைஃப்ல இது ஒரு பெரிய கனவா இருக்கு. விஜய் சார் கூட நடிக்காம என்னுடைய கனவு நிறைவேறாது. அவர் கூட நடிக்கலனா என் கேரியர் கம்ப்ளீட் ஆகாது. அது ஒன்னு மட்டும் செஞ்சிடுங்க ப்ளீஸ். காவியத்தலைவன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் சார் கூட இணைந்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என்று வேதிகா கூறியுள்ளார்.