தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு திரைப்படத்தை யாரும் பார்த்திருக்க முடியாது என்று மக்கள் போற்றும் திரைப்படங்கள் தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள்.
சினிமாவில் மக்களின் பேராதரவை பெற்று முன்னணியின் நடிகராக திகழ்ந்த எம்ஜிஆர் முதலில் நடிக்க வந்த காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஷூட் முடிந்ததும் அடுத்த ஷூட்க்கு அழைக்கும் வரை எங்கேயும் செல்லாமல் செட்டுக்கு வெளியிலேயே அமர்ந்திருப்பாராம். அப்படி ஒரு நாள் அமர்ந்திருக்கும் போது மிகவும் தாகம் எடுத்ததால் அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த அப்பன் என்பவரிடம் ரொம்ப தகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். உடனே அவர், நான் பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் ஜூஸ் கொண்டு போயிட்டு இருக்கேன் உனக்கு நான் எதுவும் தர முடியாது என்று வெறுப்பாக பேசி உள்ளார்.
பிறகு எம்ஜிஆர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு அந்த ஸ்டூடியோவை விலைக்கி வாங்கி தன்னுடைய அம்மா பெயரை வைத்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வேலை பார்த்து அப்பன் , இவர் நம்மள வேலையை விட்டு அனுப்பிடுவாரு என்று பயத்துடன் சென்றுள்ளார். உடனே அவரை அழைத்த எம்.ஜி.ஆர் உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டதும் 200 ரூபாய் என அவர் கூறியுள்ளார். இல்லை இனிமேல் உனக்கு 400 ரூபாய் சம்பளம் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு கண்ணீர் விட்டபடி அப்பன் எம்ஜிஆர் காலில் விழுந்தார். இதுதான் மக்கள் திலகம்.