தமிழில் குறைந்த அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அதன்படி தமிழில் குறைந்த திரைப்படங்களில் நடித்த தன் மீது பெரும் கவனத்தை குவிக்கும் அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் போதை ஏரி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் மூலம் சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த பட வாய்ப்பு நோக்கி போராடிக் கொண்டிருந்தார். அதன்படி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மக்கள் மத்தியில் அவருக்கு தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்கன், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் வேட்டையன் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சில தகவல்களை துஷாரா விஜயன் பகிர்ந்துள்ளார். அதில், வேட்டையன் படத்தில் ஃபர்ஸ்ட் ஷூட் ரஜினி சார் கூட தான் என்று சொன்னதும் எனக்கு காய்ச்சல் வந்துருச்சு. ரொம்பவும் பதட்டமா இருந்துச்சு. ஒரு பயத்தோடு தான் அவர் பக்கத்துல போய் நின்றேன். உடனே அவர் என்னை பார்த்ததும் நான் அவரிடம் நான் யாருன்னு உங்களுக்கு தெரியுதா அப்படின்னு கேட்டேன். உங்கள தெரியாமையா சார்பட்டா படத்தில் பயங்கரமா நடிச்சிருப்பீங்களே என்று கூறினார். அந்த வார்த்தையை கேட்டதும் எனக்கு இருந்த காய்ச்சல் அப்படியே பறந்து போயிருச்சு. எதற்கு இவ்வளவு பதட்டமா இருக்க பயமா, மரியாதையா என்று கேட்டுவிட்டு அதன் பிறகு சாதாரணமாக என்னுடன் அவர் பேசினார் என துஷாரா விஜயன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.