கல்யாணமே ஆகல அதுக்குள்ள வெக்கேஷனா..? என்ன லச்சு இதெல்லாம்.. வைரலாகும் போட்டோஸ்..!!

By Priya Ram on மார்ச் 31, 2024

Spread the love

நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக மதகஜராஜா என்ற படத்தில் நடித்தார்.

   

இவர் விஜயின் சர்க்கார், தனுஷின் மாரி, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். இது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வரலட்சுமி நடித்து வருகிறார். தற்போது தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலய் சச்சுதேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். 43 வயதாகும் அவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஆண்டுக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் தாய்லாந்து சென்று ஊர் சுற்றி வருகின்றனர். திருமணத்திற்கு முன்னரே வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் திருமணத்திற்கு முன்னரே இப்படியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.