பிரபல கவிஞரான கண்ணதாசன் சுமார் 4000 மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இது மட்டுமில்லாமல் சண்டமாருதம், தென்றல், முல்லை, திருமகள், திரை ஒலி ஆகிய இதழ்களின் ஆசிரியராக கண்ணதாசன் இருந்தார்.
தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த கண்ணதாசனுக்கு கடந்த 1980-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தனது வாழ்க்கையில் கண்ணதாசன் திறந்த புத்தகம் ஆகவே வாழ்ந்தார். தனது வாழ்க்கையை பாடல் மூலமாகவும் கண்ணதாசன் எடுத்து கூறியிருக்கிறார்.
அப்படி தன் வாழ்க்கை பற்றி கண்ணதாசன் எழுதிய பிரபல பாடலில் ஒன்று, ஒரு கோப்பையில் என் குடியிருப்பு.. ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு.. நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு.. என தொடங்கும் பாடல் ஆகும். கண்ணதாசன் எழுதிய மனவாசம், வனவாசம் ஆகிய புத்தகங்கள் அவரது வாழ்க்கையை முழுவதுமாக எடுத்து காட்டும்.