தனது வருங்கால கணவருடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய நடிகை வரலட்சுமி.. பர்த்டே யாருக்குன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!

By admin on சித்திரை 8, 2024

Spread the love

நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக மதகஜராஜா என்ற படத்தில் நடித்தார்.

   

இவர் விஜயின் சர்க்கார், தனுஷின் மாரி, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். இது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வரலட்சுமி நடித்து வருகிறார். தற்போது தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலய் சச்சுதேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். 43 வயதாகும் அவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஏற்கனவே நடிக்க வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில் வரலட்சுமியும், அவரது வருங்கால கணவரும் நாய்க்குட்டிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gucci & Zara (@guccizara_varalaxmi)