அய்யய்யோ.. இனி இவங்க சேர்வதற்கு வாய்ப்பே இல்லையா.. நீதிமன்றத்திற்கு சென்ற தனுஷ்-ஐஸ்வர்யா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on சித்திரை 8, 2024

Spread the love

பிரபல நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

   

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருந்தது. பின்னர் மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது.

   

 

ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த படங்களில் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல ரஜினிகாந்த் படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. இருவரும் விவாகரத்து மனு தாக்கல் செய்ததை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.