தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.
பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகனுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிக்க முதலில் எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல. அதுவும் அம்மா கேரக்டர் அவனுக்கு இருக்க வயசுக்கு நான் அம்மா கேரக்டர்லாம் பண்ண மாட்டேன் எனக்கு வயசு இல்ல அதற்கான பக்குவமும் இல்லை என்று இயக்குனர் ராஜேஷிடம் கூறினேன்.
ஆனா அவரு மேடம் அதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க உங்க கேரக்டர் என்னவோ அதை நீங்க பண்ணுங்க நீங்க பேசுறது தான் உங்க கேரக்டர் என்று ஏதேதோ பேசி அந்த படத்துல என்ன நடிக்க வச்சாரு. அதுல கூட ஒரு சீன்ல அவங்க என்ன பேசுறாங்கன்னு தெரியாம நான் வளர்கிறேன். ஆனால் எதிர்பார்த்ததை விட படம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது. நான் நினைச்சு கூட பாக்கல படம் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் போய் சேரும் என்று. உண்மையிலேயே நான் வெறுத்துவதுக்கே கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது என்று ஊர்வசி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…