Categories: சினிமா

தன்னை ஓவர்டேக் பண்ணிய ஊர்வசியின் நடிப்பு… பொறாமையால் கன்னத்தில் அறைந்த ஹீரோ – பத்திரிக்கையாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர் மார்க்கெட் போன பின்னர் அக்கா, அம்மா என டெம்ப்ளேட் நடிகைகளாகி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் விதிவிலக்காக கொடுக்கும் எல்லா பாத்திரங்களையும் அதன் தன்மையை உணர்ந்து நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை ஊர்வசி. தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

1980களில் தொடங்கி 90களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். அவர் நடித்த வேடங்களில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த திரிபுரசுந்தரி என்ற பாத்திரம் ரசிகர்களின் நெஞ்சில் இன்றளவும் நிலைத்து நிற்கும் ஒன்றாகும்.

அதே போல ஹீரோயின் வாய்ப்பு குறைந்த போது அம்மா வேடங்களில் நடித்தாலும் அதிலும் முத்திரைப் பதித்தவர்.  அவர் அம்மாவாக நடித்த சிவா மனசுல சக்தி முதல் தற்போதைய ஜெ பேபி வரை அதற்கான உதாரணம். இந்நிலையில் ஊர்வசியின் நடிப்பைப் பார்த்து பொறாமைப்பட்ட ஒரு நடிகர் அவரைக் கன்னத்திலேயே அறைந்துவிட்டாராம்.

இதுபற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறிய தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அந்த ஹீரோவின் பெயரைக் குறிப்பிடாமல் “ஒரு படத்தில் ஊர்வசி நடித்த போது அந்த ஹீரோவை விட சிறப்பாக நடித்துவிட்டாராம். அதனால் பொறாமையான அந்த நடிகர் அவரை டார்ச்சர் செய்து ஒரு கட்டத்தில் அவரை கன்னத்திலேயே அறைந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த ஹீரோ யாராக இருக்கும் என ரசிகர்கள் விவாதம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

vinoth

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago