Connect with us

CINEMA

பறிபோகும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்?.. பொறாமையில் பொங்கி எழுந்த நயன்தாரா.. காரணம் இந்த நடிகை தானா..??

தமிழ் சினிமாவில் இன்று வரை லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டும் நயன்தாரா ஹீரோக்களுக்கு இணையான அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் வைத்தது தான் சட்டம் என்ற அளவுக்கு இவருடைய செல்வாக்கு சினிமாவில் உள்ளது. ஆனால் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றாலே நயன்தாரா தெரிந்து ஓடுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியான நிலையில் இந்த பட பிரமோஷனுக்காக ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடாதீங்க, வேண்டவே வேண்டாம்.

   

அப்படி சொன்னாலே எல்லாரும் திட்டுறாங்க என்று கூறி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார். உண்மையில் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு ஒருவருக்கு சொந்தமாகும் நிலையில் உள்ளது. அந்தப் பொறாமையில் நயன்தாரா பிரமோஷனுக்கு பேட்டி கொடுத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது நயன்தாராவின் சமீப கால படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவரின் அண்மைக்கால நடவடிக்கைகளும் சில விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் தற்போது நயன்தாராவை விட்டுவிட்டு திரிஷாவை கொண்டாட தொடங்கியுள்ளனர்.

அதற்கு ஏற்றது போல த்ரிஷாவும் தற்போது அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இறுதியாக விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என இப்போது படு பிஸியாக திரிஷா நடிக்க தொடங்கியுள்ளார். அதனால் இவரின் ரசிகர்கள் நீங்க தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்து தான் நயன்தாரா இந்த பட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என பேசி தன் பொறாமையை வெளிப்படுத்தி இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top