Connect with us

CINEMA

இதுதான் கடைசி.. இனிமே பிக்பாஸ் பக்கமே வரமாட்டேன் போங்கடா.. தெறித்து ஓடும் கமல்.. ஷாக்கிங் தகவல்..

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுத்து வழங்கும் விதம் மற்றும் மக்களின் குரலாக போட்டியாளர்களிடம் பேசுவது, அவர்கள் தப்பு செய்தால் அதனை தட்டிக் கேட்பது என சிறந்த முறையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் முந்தைய சீசர்களை போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கமல்ஹாசன் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றார்.

   

அதாவது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது, கடந்த வாரம் நிக்சன் மற்றும் நிவிஷா விவகாரத்தை கண்டு கொள்ளாமல் அப்படியே கடந்து சென்றது என கமல்ஹாசன் சந்தித்து வரும் சர்ச்சைகள் ஏராளம். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவரை ஏராளமானோர் விமர்சித்து வரும் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் செய்யும் தவறையே தட்டிக் கேட்காத நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்தால் தவறுகளை தட்டி கேட்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால் கமல்ஹாசன் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீசனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு கமல் முடிவு செய்துள்ளார். இதிலிருந்து விலகி அரசியலில் தனது கவனத்தை செலுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இதுதான் கடைசி சீசனாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகினால் அவருக்கு பதில் சிம்புவை களம் இறக்க வேண்டும் என்றும் மறுபக்கம் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top