Categories: சினிமா

நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போன த்ரிஷாவின் திருமணம்.. பல வருடம் கழித்து அவரே கூறிய காரணம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர்.

அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார். இதனைத் தொடர்ந்து இறுதியாக அஜீத் நடிப்பில் வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்திருந்தார். தற்போது சூர்யாவுடன் இணைந்து சூரியன் 45 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சமீபத்தில் த்ரிஷா தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் திரிஷாவின் திருமணம் குறித்து நல்ல செய்தி வராதா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படி இருக்க இதற்கு முன்பு நடக்க இருந்த நிறுத்தப்பட்ட தன்னுடைய திருமணம் குறித்து த்ரிஷா பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகை திரிஷாவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் வருண் மணியனன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை கூட இணையத்தின் பகிர்ந்திருந்தார்.

ஆனால் இது திருமணம் வரை செல்லவில்லை. இந்த திருமணம் நடக்காது என திரிஷா அறிவித்துவிட்டார். அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் திருஷா கூறியுள்ளார். அதில், நானே என்னுடைய திருமணத்தை நிறுத்தி விட்டேன். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் படங்களில் நடிக்க கூடாது என்று எனக்கு கணவராக வர இருந்தவர் பல கண்டிஷன்கள் போட்டார். ஆனால் நான் நடிப்பை நிறுத்துவதற்கு பதில் திருமணத்தை நிறுத்தி விட்டேன். ஒருவேளை திருமணம் ஆகி கர்ப்பமானால் கூட அந்த காலத்திற்கு மட்டுமே பிரேக் எடுப்பேன். அப்போது கூட நான் சினிமாவில் இருந்து விலக மாட்டேன் என்று திரிஷா கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“பக்கத்தில் இருந்தும் கண்டுபிடிக்க முடியலையே…” 51 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடி கண்டுபிடித்த மகள்…! கொடுமைகள் நிறைந்த வாழ்க்கை பயணம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொார்த் பகுதியில், கடந்த 1971-ஆம் ஆண்டு 22 மாதக் குழந்தையாக இருந்த மெலிசா…

3 minutes ago

“13,000 கோடியா?.. இல்ல இன்பச் சுற்றுலாவா?”…. லண்டனில் நடந்தது என்ன?… முதலமைச்சர் விஜய்யின் பயண ரகசியத்தை அம்பலப்படுத்திய திமுக……!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர்…

7 minutes ago

ஐயோ கொடுமையே… இரவில் நடுரோட்டில் நபரின் மீது… காரை ஏற்றிவிட்டு பறந்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… லாஸ் ஏஞ்சலஸை உலுக்கிய மர்மச் சம்பவம்…!

இரவில் சாலையில் செல்லும் பெண் ஒருவர் செய்த செயல், அங்கு நடந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் பெரும் புதிராக மாற்றியுள்ளது. சாலையில்…

10 minutes ago

“வீடியோவில் இஸ்லாமிய வார்த்தைகள் பயன்பாடு…” வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்ன்னு சொல்ல மாட்டீங்களா…? மேற்கு வங்க பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாய்ந்த ஆக்ஷன்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் கரக்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 2021-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா…

11 minutes ago

“கட்சியை கலைச்சிட்டு திமுகவுக்கே வர்றேன்னு சொன்னவர் துரை வைகோ”…. பிச்சை போட்டதே நாங்க தான்…. புதிய பரபரப்பை கிளப்பிய கே.என்.நேரு….!

திருச்சியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக…

12 minutes ago

மாரியம்மன் சாட்சியாக சத்தியம்…. எதிர்ப்புகளுக்கு மத்தியில் மரகதம் குமரவேல் எடுத்த அதிரடி முடிவு…. சூடான இடைத்தேர்தல் களம்….!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் த.வெ.க. வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல், சிறுநல்லூர் ஸ்ரீமாரி…

17 minutes ago