சினிமா நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர்கள் தான் சீரியல் பிரபலங்கள். ஒரு சீரியலில் நடித்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு அதன் மூலமாக தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அதன்படி தமிழ் தொலைக்காட்சியில் எமோஷனல் ஹிட் சீரியல்களில் ஒன்றான மகாநதி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் சுவாமிநாதன். அதில் அவர் நடித்த விஜய் என்ற கதாபாத்திரம் நம்ம வீட்டு பையனாகவே பரிணமித்து பெண் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது.
தற்போது அந்த நடிகர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த படம் கன்னடத்தில் உருவாகி தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கமரோட்டு 2 என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுவாமிநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது அவருடைய முதலாவது முயற்சியாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா உபேந்திரா இணைந்துள்ளார். தமிழில் இவர் ராஜா என்ற படத்தில் அஜித்குமார் உடன் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இவர் ஒரு கடுமையான அதிகாரமிக்க போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது அவருக்கு கதையின் முக்கிய திருப்பங்களை உண்டாக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வர மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…