சவுத் இந்தியன் குயின்னா சும்மாவா.. த்ரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் லிஸ்ட்.. வாங்க பார்க்கலாம்..!

By Mahalakshmi on வைகாசி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் த்ரிஷா கோலிவுட் பட்டியில் பணக்கார நடிகைகளின் ஒருவர்.

   

இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் சொத்து மதிப்பு மற்றும் இவர்கள் வைத்திருக்கும் கார் தொடர்பான விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் திரிஷாவிடம் இருக்கும் கார் கலெக்ஷன்களை பற்றி இதில் பார்ப்போம்.

   

திரிசா ஒரு பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கார் வைத்திருக்கின்றார். இதன் மதிப்பு சுமார் 80 லட்சம் ஆகும்.

 

அதை தொடர்ந்து ரேஞ்ச் ரோவர் எவோக் என்ற காரை வைத்துள்ளார். இதன் விலை 75 லட்சம். இது திரிஷாவுக்கு பிடித்த கார்களில் ஒன்றாம்.

அதனைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஒரு தனித்துவம் வாய்ந்த காரை வைத்திருக்கின்றார். இதன் விலை சுமார் 5 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.