சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி பிசினஸில் சாதித்த நடிகைகளில் பலரை கூறினாலும் ஒரு சிலர் மட்டுமே முன்னணி இடத்தை வகுக்கிறார்கள். நடிகை நயன்தாரா லிப் பாம், 9 ஸ்கின் மற்றும் பெமி 9, டிவைன் புட், சாய் வாலே போன்ற பல நிறுவனங்களின் முதலீடு செய்து கோடி கோடியை வருமானம் ஈட்டி வருகிறார்.
நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவும் சமீபத்தில் ஷாஹி என்கின்ற ஜவுளி நிறுவனத்தை தொடங்கினார். அது தவிர மழலையர் பள்ளி, இ-காமர்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்து இருக்கின்றார். தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கின்றார் சமந்தா. இவர்களைக் காட்டிலும் பிசினஸில் இரண்டே ஆண்டுகளில் 400 கோடி வருமானம் ஈட்டிய நடிகையைப் பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.
அவரது பெயர் ஆஷ்கா கொராடியா, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர் 2019 ஆம் ஆண்டு வரை நடித்து வந்தார். நடிப்புக்கு பாய் சொல்லிய ஆஸ்கா கொராடியா பிசினஸில் களம் இறங்கினார். ரெனீ என்கின்ற அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கிய இவர் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றார்.
தொழில் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டியிருக்கிறார். இந்திய மதிப்பில் 834 கோடி ஆகும். 2024 ஆம் ஆண்டு மட்டும் இவர் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளாராம் . ஒரு தொழில் முனைவோராக கொடிக்கட்டி பறந்து வருகின்றார் ஆஷ்கா கொராடியா.