Categories: சினிமா

அன்று பிரபல நடிகருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்.. இன்று அம்பானி வீட்டு மருமகள்.. அதிர்ச்சியளிக்கும் நடிகையின் பின்னணி..

Spread the love

பிரபல நடிகையாக 1980களில் இருந்தவர் டினா முனிம். குஜராத்தி நடிகையான இவர், லண்டனில் படித்த இவர், படிப்பை முடித்த பின்பு மாடலிங் செய்தார். பெமினா டீன் பிரிசன்ஸ் என்ற விருதை, 1975ல் வென்றார். அதன்பின், பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு டினா முனிமுக்கு கிடைத்தது. நடிகர் தேவ் ஆனந்த் படங்களில் நடித்து, இந்தி படவுலகில் பிரபலமானார். இதற்கிடையே இந்தி நடிகர் சஞ்சய் தத் உடன் ஏற்பட்ட பழக்கம், காதலானது. திருமணம் செய்யாமலேயே அவருடன் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் டினா முனிம் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இதற்கிடையே அவருடன் நடிக்கும் நடிகர்களுடன் டினா முனிமுக்கு தொடர்பு இருக்குமா என சஞ்சய் தத் சந்தேகப்பட்டார். இதையறிந்த டினா முனிம், சஞ்சய் தத்தை வெறுத்த அவரை விட்டு பிரிந்தார்.

இதையடுத்து, இந்தி படவுலகில் தொடர்ந்து பயணித்த டினா முனிம், நடிகர் ராஜேஷ் கண்ணாவை சந்தித்தார். நாளடைவில் அவருடன் காதல் ஏற்பட்டது. அவர் ஏற்கனவே டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்திருந்ததால், டினா முனிம் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. எனினும் சில ஆண்டுகள் அவருடன் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த டினா முனிம், ஒரு கட்டத்தில் அவரை விட்டு பிரிந்தார். பிறகு ஒரு பங்க்‌ஷனில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி அவரை பார்த்து டினா முனிம் அழகில் மனதை பறிகொடுத்தார். ஆனால், ஏற்கனவே 2 ஆண்களால் மனம் வெறுத்திருந்த டினா முனிம் அனில் அம்பானியை கண்டுகொள்ளாமல், அமெரிக்காவில் சென்று செட்டிலாகி விட்டார்.

இதற்கிடையே டினா முனிமை காதலிப்பதாக, அனில் அம்பானி தன் பெற்றோரிடம் சொல்ல,. நம் குடும்பம் பாரம்பரியமான கவுரவம் மிக்கது. ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்குபின் வேறு திருமணத்துக்கு அனில் அம்பானி ஒத்துக்கொள்ளாததால் ஒரு கட்டத்தில் டினா முனிமை, மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தனர். அந்த திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டது. அந்த திருமணத்தில் டினா முனிம் கட்டியிருந்த வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த பட்டுப்புடவை அந்த காலகட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று 15 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார் ஒரு நேர்காணல் மூலம் டினா முனிம் – அனில் அம்பானி காதல் கதையை சொன்ன நடிகை குட்டி பத்மினி.

admin

Recent Posts

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

14 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

17 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

19 minutes ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

30 minutes ago

“ஒரு பைசா கூட விடல…” சேற்றில் புதைந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம்…! உரியவரிடம் ஒப்படைத்த மீட்பு குழு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…

34 minutes ago