சன் டிவியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இதை தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிளில் தொகுப்பாளராகவும் பயணித்தார். இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் தான். இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை ஷாலினியின் அக்காவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அண்ணா, மொழி போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ஹீரோயின் ஆக நடித்தார்.
2002ல் அர்ஜுன் ராமராஜன் என்று அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 2004ல் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் விழுந்த தெக்கித்தி பொண்ணு, சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.
இவர் சென்னையில் தற்பொழுது ஒரு பரதநாட்டிய பள்ளி ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பரதம் கற்றுத் தந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ’21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. பிரிந்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. விவாகரத்து பிறகு என்னை விட எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
நானும் கஷ்டப்படக்கூடாது என்று என்னை படிக்க சொன்னார்கள். அதன்பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்ட போது மன அழுத்தத்தில் இருந்தேன், தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் தோன்றியது. பின் இது என்னவாழ்க்கை என தோன்றும் போது எனது தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்’ என மனவருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேட்டியானது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…