தமிழ் திரை உலகில் ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனன்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 2009 ல் வெளியான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ராமகிருஷ்ணன் என்பவர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக நடித்த தனன்யா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் இதனை அடுத்து அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது மருத்துவ படிப்புக்கு விடுமுறை எடுத்து சினிமாவில் நடித்து வந்த தனன்யா, சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட விலகி மருத்துவ படிப்பை முழுமயாக தொடர்ந்து மருத்துவராகவும் மாறினார். இந்த நிலையில் நடிகை தனன்யா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாகவே ஒரு மருத்துவராகவும் குடும்பத்தலைவியாகவும் மாறிவிட்டார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தனன்யா. இவர் தற்பொழுது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
