குணா படத்துக்கு பின் நடிகை ரோஷினி ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை… இயக்குனர் சந்தானபாரதி சொன்ன பதில்!

By vinoth on பங்குனி 4, 2024

Spread the love

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அந்த வகையில் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் குணா.

1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் தளபதியோடு மோதிய குணா திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இப்போது ஒரு கல்ட் கிளாசிக்காக உள்ளது. படம் ஹிட்டாகவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்களும், படத்தில் முக்கியமானக் காட்சிகளை உருவாக்கிய குகைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத அந்த குகை அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து குணா குகை என்றே அழைக்கப்பட்டு வந்தது.

   

அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் இப்போது அந்த குகை பாதுகாப்பு வசதிகள் பொறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுல்லம் பாய்ஸ் இந்த குகையில் சிக்கிய ஒரு நபரை அவரின் நண்பர்கள் மீட்பது பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அதையடுத்து மீண்டும் குணா திரைப்படமும்  குணா குகையும் இப்போது மீண்டும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

   

குணா படத்தில் மற்றொரு ஆச்சர்யமாக அந்த படத்தில் நடித்த நடிகை ரோஷினி வேறு எந்த படத்திலும் அதன் பின்னர் நடிக்கவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. பலரும் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் புரளியைக் கிளப்பிவிட்டனர். ஆனால் அது உண்மையில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் குணா படத்துக்குப் பிறகு ரோஷினி ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறித்து இயக்குனர் சந்தானபாரதி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “ரோஷினி திரைப்படத்தில் நடிக்கவே விருப்பம் இல்லை. அவர்கள் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். மிகவும் மாடர்னான அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. தொழில்முறை நடிகையாக இருப்பது அவருக்கு செட்டாகவில்லை. அதனால்தான் அவர் குணா படத்துக்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.