தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியான நிலையில் அதில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் நீங்கள் விஜய், அஜித், தனுஷ் மற்றும் சூர்யாவிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய தமன்னா, விஜய் இடம் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கா என்று கேட்பேன்.

அஜித் அருமையாக சமைப்பார் படத்தின் சூட்டிங் போது எனக்கு இட்லி கொடுத்தார். அது மிகவும் சாப்ட் ஆக இருந்தது இதுவரை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எனக்கு எப்போ இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அஜித்திடம் கேட்பேன். அவர் பைக் ரைடு கூப்பிட்டா கூட போயிடுவேன். நடிகர் தனுஷின் எப்போது மும்பை வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறுவேன். ஆனால் அவர் அதை பண்ண மாட்டார் அதை தான் நான் அவரிடம் கேட்பேன். சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதையம்சம் குறித்து கேள்வி கேட்பேன் என தமன்னா வெளிப்படையாக பதில் அளித்து.
