தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். அவரும் ஒரு நடிகை தான். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடி பொம்பளை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ஐஸ்வர்யா.
இந்நிலையில் சமீபத்தில் அவர் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் பள்ளியில் படிக்கும் போதே நடித்து சரியாக வராது. நாடகத்தில் கூட நான் சரியாக நடிக்க மாட்டேன். ஆனால் நடனம் மற்றும் பாட்டு என்றால் எனக்கு மிகவும் விருப்பம். எப்போதுமே நான் சிரித்த முகத்துடன் தான் இருப்பேன். எனக்கு அழும் காட்சியை படமாக்கினாலே பிடிக்காது. ஆனால் சிரிக்கச் சொன்னால் நாள் முழுக்க சிரித்துக் கொண்டே இருப்பேன்.
என் கணவருடனும் வீட்டில் நான் அப்படித்தான் இருப்பேன். விடிய விடிய என் கணவர் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். திருமணம் ஆகி 37 வருடம் ஆகிய போதிலும் எனக்கும் என் கணவருக்கும் இதுவரை ஒரு சண்டை கூட வந்ததே இல்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இருவரும் கலந்து பேசி தான் முடிவு எடுப்போம். எனக்கு சினிமா பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் ஓரளவுக்கு புரிதல் இருக்கிறது என்றால் அது கட்டாயம் என் கணவரால் தான் என்று தனது கணவர் சிவச்சந்திரன் பற்றி பல விஷயங்களை லட்சுமி பகிர்ந்து கொண்டார்.