குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்ற ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் கமலேஷ்…. வெளியான சமீபத்திய புகைப்படங்கள்….

By Samrin on ஆவணி 4, 2023

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சன் டிவியில் பல வருடங்களாக குடும்ப கதைகளை கொண்ட பல சீரியல் வழங்கி வருகின்றனர்.

   

அந்த சீரியல்களை நம்மால் தற்போது வரை மறந்திருக்க முடியாது. குறிப்பாக சொல்லப்போனால் மெட்டி ஒலி,  சித்தி,  கோலங்கள்,

   

 

அண்ணாமலை,  செல்வி,  திருமதி செல்வம்  போன்ற  சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சீரியல் ஆக அமைந்துள்ளது.

அப்படி சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’ இந்த சீரியலை இயக்குனர் திரு செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் மதுமிதா,

கனிகா,  பிரியதர்ஷினி,  ஹரிப்பிரியா இசை,  கமலேஷ்,  விபு ராமன், சத்யபிரியா,  பாம்பே ஞானம் போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கமலேஷ்.இவர்  சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்ன திரையில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே  உள்ளது நடிகர் கமலேஷ் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி கலந்து  பிரபலமான சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 12 வருடம் கழித்து ஒரு பெண் குழந்தை  பிறந்தது. நடிகர் கமலேஷ் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி தனது குடும்பப் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுது  தன் குடும்பத்துடன் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.