தனுஷ் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர்தான் சுரேகா வாணி. அந்த திரைப்படத்தின் இவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சித்தார்த்த மற்றும் அமலாபால் நடித்த காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அமலா பாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். பிறகே விக்ரமின் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு மனைவியாக நடித்தார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவ்வாறு கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் அம்மா, அக்கா மற்றும் அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரீதா என்ற ஒரு மகளும் உள்ளார்.
தனது மகளின் சம்மதத்துடன் சுரேகாவானி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது முடியை வெட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…