நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணமாக போகுதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சுனைனா. அதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் எடிட்டிங்-கில் ஷங்கர் அந்த பகுதியை தூக்கி விட்டார். அதனால் இவர் முதலில் நடித்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இந்த திரைப்படத்தில் நகுல் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்பறவை, சமர், வன்மம், தெறி, கவலை வேண்டாம், தொண்டன், என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு பெறவில்லை. முன்னணி நடிகையாக வளர முடியாமல் பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இருப்பினும் முன்னணி நடிகையாக மார்க்கெட்டை பெற முடியவில்லை. திறமையான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் அவரின் மார்க்கெட் ரொம்பவே அடி வாங்கியது. அவருக்கு தற்போது 35 வயதாகின்றது. இதுவரை எந்த நடிகருடனும் கிசுகிசுவில் சிக்கவில்லை. ஆரம்பத்தில் நக்குலுடன் இரண்டு திரைப்படங்களில் நடித்த காரணத்தினால் அவருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நகுல் உடனடியாக தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகை சுனைனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் தனது காதலரின் கையில் தனது கையை வைத்தபடி போட்டோ எடுத்து லாக் என்பதை உணர்த்த பூட்டிய எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சுனைனா காதலில் விழுந்து விட்டாரா? விரைவில் திருமணம் நடக்கப் போகின்றதா? காதலர் யார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகரா? தொழிலதிபரா? யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று அவரது போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
