நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, “எனக்கு இறைவன் அருளால் எல்லாமே தேடி வந்தது. ஏர்போர்ஸ் வேலையும் கூட அப்படித்தான். மதுரையில் நான் டிவிஎஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது எம்ப்ளாயின்ட்மென்ட் ஆபிசில் பதிவு செய்து வைத்திருந்தேன்.விமானப்படை ஆள் சேர்ப்புக்கான தேர்வில் எல்லாவற்றையும் பாஸ் செய்துவிட்டேன்.
தாம்பரம் ஆபீஸ் வந்தேன். அன்றே என்னை பெங்களூருவுக்கு அனுப்பி விட்டனர். அங்கு டிரெயினிங் முடித்து என்னை டெல்லி அனுப்பினர். அப்படிதான் நான் ஏர்போர்ஸ் வேலையில் சேர்ந்தேன்.” எனக் கூறியுள்ளார். ஏர்போர்ஸில் சில ஆண்டுகள் பணியாற்றிய டெல்லி கணேஷ் டெல்லியில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர்.
1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் கே. பாலசந்தர் டெல்லி கணேஷ் அவர்களை அறிமுகப்படுத்தினார். 1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.
அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான். அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ்.
இப்படிப்பட்ட டெல்லி கணேஷுக்கு ஒரு செண்ட்டிமெண்ட் உள்ளதாம். அது என்னவென்றால் அவர் இறந்து போனது போல நடிக்க சொன்னால் நடிக்க மாட்டாராம். இது பற்றி பேசியுள்ல அவர் ‘எவ்வளவு ருபாய் காசு கொடுத்தாலும் இறந்து போற மாதிரி உள்ள சீன்ல மட்டும் நடிக்கவே மாட்டேன், இறப்பு அப்டினாலே ரொம்ப பயம்” என தெரிவித்துள்ளார்.
