பிரபல நடிகையான சுலக்ஷனா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலும் சுலக்ஷனா நடித்துள்ளார். சமீபத்தில் சுலக்ஷனா சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தாலி கட்டி விடுவேன் என தெலுங்கு நடிகர் மிரட்டிய போது நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதுட்டீங்கலாமே என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சுலக்ஷனா ஆமா இந்த வேலையெல்லாம் பண்ணது சந்திரமோகன் சார் தான்.

ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு காட்சியை ரெண்டு மூணு டேக் எடுத்தாங்க. அப்போ அவரு நான் உனக்கு மூணு முடிச்சு போட்டுட்டேன். நீ எனக்கு பொண்டாட்டி ஆயிட்ட. சம்பிரதாயபடி இத்தனை ஆளுங்க வந்து சாட்சி சொல்ல போறாங்க. மரியாதையா என் வண்டியில ஏறிடு. நான் கூட்டிட்டு போயிடறேன் அப்படின்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப அழுகையா வந்துட்டு. எனக்கு அப்போ விவரம் தெரியாது.

அப்போ இதுதான் கல்யாணம் போல இருக்கு அப்படின்னு நான் ரொம்ப அழுதேன். அதுக்கப்புறம் அங்க இருக்கிறவங்க எல்லாரும் என்ன சமாதானப்படுத்தினார்கள். சந்திரமோகன் சார் கிட்ட சார் நீங்க தாலி எல்லாம் கட்டாதீங்க. சும்மா ஆக்ஷன் மட்டும் பண்ணுங்க அப்படின்னு சொன்னாங்க. அதனாலேயே படத்துல ஏதாவது தாலி கட்டுற மாதிரி சீன் எடுத்தா முடிச்சி போடாதீங்க. சும்மா ஆக்சன் மட்டும் பண்ணுங்க அப்படின்னு சொல்லுவேன். ஏன்னா அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அந்த மரியாதை நம்ம என்னைக்கும் கொடுத்தே ஆகணும் என சுலோச்சனா கூறியுள்ளார்.
