நான் இயக்கிய படத்தை பாண்டியராஜன் வெளிவராமல் செய்துவிட்டார்.. எமோஷனலான நடிகர் ரமேஷ் கண்ணா..!

By Nanthini on ஐப்பசி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் தான் ரமேஷ் கண்ணா. இவர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்து வசூலை அள்ளிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மூலம்தான் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் துணை நடிகராக ஆண்பாவம், பூவே உனக்காக, சூரியவம்சம் மற்றும் உன்னை நினைத்து போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரமன் மற்றும் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றிய இவர் வசனகர்த்தாவாக சூப்பர் ஸ்டார் நடித்த பல படங்களுக்கு மாஸ் வசனத்தை கூட எழுதியுள்ளார்.

   

 

   

நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா என பல திறமைகளை கொண்ட ரமேஷ் கண்ணா அஜித்தை வைத்து தொடரும் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது மட்டுமல்லாமல் அஜித் உடல் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம், நீ வருவாய் என உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஆள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். தற்போது அவரை ஒரு சில படங்களில் காண முடிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இயக்கிய ஒரு படம் குறித்து பேசி உள்ளார்.

 

அதில், சினிமாவில் வாய்ப்பு தேடிய போது பாண்டியராஜுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வேலை பார்த்தேன். பிறகு இயக்கத்தின் மீது ஆசை வந்து பாண்டியராஜன் அவர்களை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று யோசித்தேன். அப்படித்தான் காதல் நிலம் வேண்டும் என்று படத்துக்கு டைட்டில் வைத்து அந்த படத்தை யோசித்தேன். பிறகு டைட்டில் சரியில்லை என்று பாண்டியராஜன் மாற்ற சொன்னார். சரி என்று காக்கா கடின்னு படத்துக்கு பெயர் வைத்தேன்.

படம் ஷூட்டிங் எல்லாம் முடிந்து சென்சாரும் பண்ணியாச்சு. படம் வந்துவிடும் என்று வீட்டில் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அதில் உள்ள காட்சிகளை பார்த்த சிலர் ரமேஷ் கண்ணா வந்து விட்டால் நீங்க அவ்வளவுதான் காலி என்று பாண்டியராஜனிடம் கூறினர். இதைக் கேட்டு பல பிரச்சனைகளை செய்து படம் வெளிவராமலேயே பாண்டியராஜன் செய்துவிட்டார். தற்போது அந்த படத்தில் கிளிப்ஸ் கூட எதுவுமே இல்லை என்று ரமேஷ் கண்ணா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.