வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். அவரை youtube இல் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். பைக் ஓட்டி இலக்குகள் மத்தியில் பிரபலமான இவர் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் செல் அம் என்பவர் இயக்கி வந்த நிலையில் ஏற்கனவே திருவிக பூங்கா என்ற திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். மஞ்சள் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக படத்தின் இயக்குனர் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் அவர் தான் சூப்பர் ஸ்டார், ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என்று இயக்குனர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் TTF வாசன் தனது youtube சேனலில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், இயக்குனர் படத்திலிருந்து என்னை நீக்கியதே எனக்கு தெரியாது. அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசியது இல்லை. மஞ்சள் வீரன் படத்தின் போட்டோ சூட் மட்டுமே நடந்தது. அதற்குக் கூட நான்தான் பணம் செலவு செய்தேன். அந்த பணத்தைக் கூட நான் கேட்க மாட்டேன் ஆனால் படத்திலிருந்து நீக்கியதற்கான காரணத்தை சொல்லி விடுங்கள் என்று கூறி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதால் அப்படத்தில் கதாநாயகனாக நடித்த படக்குழு என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவலை நான் உறுதியாக கூறவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் இயக்குனர் வெளியிடுவார் என்று கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே மஞ்சள் வீரன் திரைப்படத்தில் கூல் சுரேஷ் ஹீரோவாக என்று ஆவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
