புத்தாண்டில் வீடியோ வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன கருடன் பட நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

By Nanthini on தை 1, 2025

Spread the love

தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா. மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்துவந்தார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

ஏன் வேனுமானு யோசிச்சேன்..ஒருகட்டத்தில் நடந்துட்டு - மனம் திறந்த கருடன் பட நடிகை! - தமிழ்நாடு

   

இதைதொடர்ந்து கர்ப்பமான இவர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஷிவதா தனது பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்று  பெயர் சூட்டியுள்ளார். இவர் நடிகர் ஆரி அர்ஜுனன் உடன் நடித்து  2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஷிவதா.  தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

நெடுஞ்சாலை' பட ஹீரோயினை நினைவிருக்கா? அவரது கணவர், குழந்தையை பாத்துருக்கீங்களா?

 

இந்நிலையில் நடிகை ஷிவதா  2024 ஆம் ஆண்டு பொது வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டில் அந்த வீட்டை கட்டி முடித்து குடியேறியுள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றை தனது குழந்தையுடன் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sshivada பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sshivadaoffcl)