தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். ஆனால் இந்த சேனலில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் அடுத்தடுத்து ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வந்து விடுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. காதல் மற்றும் எமோஷன் என அனைத்தும் கலந்த தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலை பிரம்மா ஜி தேவ் என்பவர் ஆரம்பத்தில் இயக்கி வந்த நிலையில் தற்போது ஜீவ ராஜன் என்பவர் இயக்கி வருகின்றார்.
இந்த சீரியல் சுமார் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியலில் கணேஷ் வெங்கட்ராம் மருத்துவர் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக கீர்த்தனா மற்றும் அபிராமி வெங்கடாசலம் நடித்து வருகின்றனர். மருத்துவராக இருக்கும் எழில் இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன. அஞ்சலி என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில் இந்துமதி எழிலின் தோழி மனோகரி சூழ்ச்சியால் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றார்.
எழிலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் மனோகரி ஒருபுறம் இருக்க பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வரும் சுடர்விழியை எழில் திருமணம் செய்து கொள்ள நேர்கின்றது. பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மனோகரியின் சுயரூபம் வெளியே வர தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் நினைத்தேன் வந்தாய் சீரியல் கிளைமாக்ஸ் எட்ட உள்ளதாகவும் விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது