breakfast

காலையில் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது… ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

By Meena on ஜனவரி 1, 2025

Spread the love

ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். ஊட்டச்சத்துகள் இருக்கும். அவைகளை சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட வேண்டும். கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடும் போது தான் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக உடல் எடை கூடுவது, ரத்த அழுத்தம், நீரழிவு, கல்லீரல் பிரச்சினைகள் போன்றவைகள் உருவாகிறது. அதுபோல காலை வேளையில் சாப்பிடக்கூடாத ஒரு சில உணவுகளும் இருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

   

காலை உணவு என்பது மிக முக்கியமானது. அன்றைய தினம் முழுவதும் நமக்கு ஆற்றல் தரக்கூடியது காலை உணவுதான். அதனால் காலை உணவுக்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்கி எழுந்து காலையில் முதலாவதாக நாம் எதை பருகுகிறோம் எதை சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமானது. காலையில் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடவே கூடாத உணவுகள் இதுதான்.

   

காலையில் முதலாவதாக பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. பூரி, வடை போன்றவற்றை சாப்பிடக்கூடாது. அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ள இந்த பொருட்களை சாப்பிடுவதற்கு நம் மனது தூண்டும். ஆனால் இது உடல் எடையை உடனே அதிகப்படுத்தி விடும். மேலும் அஜீரணம் ஏற்பட்டு அந்த நாள் முழுவதும் மந்தமாக நமக்கு இருக்கும்.

 

அடுத்து சேலட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சில பச்சை காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாலடுகள் ஆரோக்கியமாக கருதப்பட்டாலும் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அசவுரியத்தை ஏற்படுத்தலாம் .சாலடுகள் ஜீரணிக்க சவாலாக இருப்பதால் அதன் விளைவாக வயிற்று வலி செரிமான தொந்தரவுகள் ஏற்படலாம். அதனால் சேலட் சாப்பிடுவதற்கு முன்பு ஏதாவது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்ட பின்பு முற்பகலிலோ அல்லது இரவு நேரங்களிலோ சாலட்டை சாப்பிடலாம்.

அடுத்தாதாக சிட்ராஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகளுடன் உங்கள் காலை உணவை தொடங்கக்கூடாது. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிரம்பியிருப்பதால் வெறும் வயிற்றில் உட்கொள்வது அமில ரிப்ளக்ஸ் மற்றும் அசௌரியங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். அதனால் காலையில் வெறும் வயிற்றில் இந்த சிட்ரஸ் பழங்கள் அல்லது ஜூஸுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதேபோல காலை உணவில் அதிகமான காரம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் சாப்பிட வேண்டாம். மிளகாய் மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த காலை உணவுகள் வயிற்றுப் பகுதியில் எரிச்சல் அடைய செய்யும். வெறும் வயிற்றில் காரணமான உணவுகளை உட்கொள்ளும் போது உடனே நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அதனால் மிதமான காரம் சேர்த்த உணவுகளை காலை நேரத்தில் உண்ண வேண்டும்.

பிறகு வாழைப்பழங்கள் காலையில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது சத்துள்ள பழமாக இருந்தாலும் வெறும் வயிற்றில் உட்கொள்வது சிறந்த தேர்வு அல்ல. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அடுத்ததாக மைதாவால் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்க்கலாம். இது போன்ற உணவுகளை நீங்கள் காலை உணவில் கட்டாயம் சேர்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.