இப்பவும்  நீங்க ஹீரோயினா நடிக்கலாம்… டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் (வீடியோ)…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் ‘ரிக்சா மாமா’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்தார்.

   

இவர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், அனிதா விஜயகுமார் என்ற சகோதரிகளும், அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ஆனால் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியின் jodi are you ready என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும், கிளாமர் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தனது போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…