தமிழ்நாட்டில் 60 கலில் எப்படி எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆளுமையும், திறமையும் தமிழ் சினிமாவிலும் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்ததோ அதேபோல் இவர் இருவர்களைப் போலவே 80 களில் மக்கள் மனதை ஆர்ப்பரிக்க உருவானவர்கள் தான் ரஜினியும் கமலும், அவர்கள் இருவரும் எப்படி தனித்திறமையால் இருவருக்கான தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார்களோ அதே போல் ரஜினியும் கமலும் இவர்களின் தனித்துவமான திறமைகளை வைத்து தமிழ் சினிமாவை மேம்படுத்திக் கொண்டிருந்தார்கள், அதில் முக்கியமாக ரஜினி கே என்ற பொருத்தமான ஒரு பாடி லாங்குவேஜ், இதுவரை யாரும் அப்படி ஒரு நடிப்பையும் வித்தியாசமாகவும் ஸ்டைலான உடல் தோரணையை பார்த்ததில்லை, ரஜினியின் அந்த ஸ்டைல் தான் தமிழ் சினிமாவின் திரை உலகின் அடுத்த கட்டத்தன் போக்கையே மாற்றிவிட்டது, பாலிவுட் டே திரும்பி பார்க்க வைத்தவர் தான் ரஜினி, ஒன்றுக்கொன்று சலச்சதல்ல என்பது போல் கமல்ஹாசனும் தன் உடல் பாவனை மற்றும் முகைபாவனை மொழி மூலம் தன் சிந்தனை மூலமும் தமிழ் சினிமாவை சிறுசிறு துண்டுகளாக செதுக்கி உருவாக்கி தமிழ் சினிமாவின் உச்ச கோட்டையை கட்டி வைத்திருந்தார்.
கமல்ஹாசன் என்றாலே ஹாலிவுட் தோத்துவிடும், தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருந்தது, அதை முழுமையாக உடைத்து, இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என்று இருந்த மக்கள், சிந்தனையை எப்படி நாளும் படம் எடுக்கலாம் எப்படி எடுத்தாலும் கதையின் நுணுக்கம் தெளிவாகவும் திரையின் இயக்கம் நுணுக்கமாக மக்களை புதுமைப்படுத்தி காட்டினாலே போதும் மக்களுக்கு பிடித்து விடும் என்று தன் சிந்தனை மூலம் தமிழ் சினிமாவை வெளி உலகத்திற்கு எடுத்துச் சென்றார்.
தமிழ் சினிமாவின் கட்டமைப்பு இப்படித்தான் என்று அதிலேயே ஓட்டி விடாமல் தன் திறமையை தெளிவாக காண்பித்தால் போதும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று வித்தியாசமான புதுமையான தொழில்நுட்பங்களையும் புதுமையான கதாபாத்திரங்களையும் மக்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் திரைக்கதைகளையும் கொண்டு வந்து சேர்த்தார்கள் இவர்கள் இருவரும், இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தமிழ் சினிமாவின் அடித்தளமே,
60களில் ஆரம்பித்து 2024 வரையும் இவர்கள் ஆளுமை தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது,
ஒரு நாள் இவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருந்த பொழுது ரஜினி கமலிடம் எனக்கு இந்த பயணம் போதும் நான் இத்துடன் சினிமாவை விட்டுப் போகிறேன் என்று சொன்னவுடன், கமல்ஹாசன் “அச்சச்சோ என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க ரஜினி” உங்கள வச்சு தான் நான் இருக்கிறேன் இப்ப நீங்களும் சினிமா விட்டு போறேன்னு சொன்னீங்கன்னா என்னையும் சினிமா விட்டு போக சொல்லுவாங்க அதனால் சினிமா விட்டு போகாதீங்க, நீங்க மேலும் நடிக்கணும், புதுப்புது வித்தியாசமான படங்களை கொடுக்கணும், அதை மக்கள் பார்த்து ரசிகனும் என்று கமலஹாசன் அவரை கையணைத்து தாழ்ந்து கேட்டுக் கொண்டார், அதற்கு ரஜினியும் அவர் பாணியில் சிரித்து கவலைப்படாதீர்கள் கமல் நான் சினிமா விட்டு போக மாட்டேன் என்று உறுதியளித்தார்.