தளபதியின் ‘விசில் போடு’ பாட்டுக்கு.. மாஸாக நடனமாடிய பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 7, 2024

Spread the love

நடிகர் விஜயின் கோட் படத்தில் இருந்து வெளியான ‘விசில் போடு’ பாட்டுக்கு நடிகை சோனல் தேவராஜ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

   

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் விஜய்யுடன் சேர்ந்து இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள்.

   

 

அதுமட்டுமில்லாமல் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஒரு கேமியோ ரோலில் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி படம் முழுக்க பல பிரபலங்கள் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டிருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sonal Devraj (@bhaiyajiismile)

இதற்கு இடையில் விஜய் பாடிய ‘விசில் போடு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகையான சோனல் தேவராஜ் இந்த பாட்டுக்கு சூப்பராக டான்ஸ்-ஆக இருக்கின்றார், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.