பிரபல நடிகரான ராஜ்கபூர் தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரத்திலும் வில்லனாகவும் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். இவர் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். பின்னர் பாரதி வாசுவிடம் சில நாட்கள் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
ராஜ் கபூர் தாஜ்மஹால், ஏழையின் சிரிப்பில், மாயி, தென்னவன், ஐயா, ஆறு, அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அருமையாக நடிக்கும் ராஜ் கபூர் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதுவரை ராஜ் கபூர் 17 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் ராஜ்கபூர் கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீசான தாலாட்டு கேக்குதம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த படத்தில் பிரபுவும் கனகாவும் நடித்திருந்தனர். அடுத்ததாக 1992-ஆம் ஆண்டு சின்ன பசங்க நாங்க, 1993-ஆம் ஆண்டு உத்தமராசா, சின்ன ஜமீன், 1994-ஆம் ஆண்டு சீமான், சத்தியவான், 1997-ஆம் ஆண்டு வள்ளல், 1998-ஆம் ஆண்டு அவள் வருவாளா, கல்யாண கலாட்டா, 1999-ஆம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இயக்கினார்.
அடுத்ததாக 2000- ஆம் ஆண்டு சுதந்திரம், 2001-ஆம் ஆண்டு என்ன விலை அழகே, 2002-ஆம் ஆண்டு சமஸ்தானம், 2003 ஆம் ஆண்டு ராமச்சந்திரா, 2005 ஆம் ஆண்டு சிவலிங்கம், ஐபிஎஸ், 2006-ஆம் ஆண்டு குஸ்தி, 2008-ஆம் ஆண்டு வம்பு சண்டை ஆகிய படங்களை ராஜ்கபூர் இயக்கியுள்ளார். கடந்த 2017- ஆம் ஆண்டு பிரபல சன் டிவி-யில் ஒளிபரப்பான நந்தினி சீரியலை ராஜ் கபூர் தான் இயக்கியுள்ளார். இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.