இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி பிரபல நடிகை மற்றும் பிரபல நடிகரின் மனைவியும் கூட.. யாருன்னு கண்டுபிடிங்க..!

By Mahalakshmi on ஆனி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் சில படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா என இப்படி கூறிக்கொண்டே போகலாம். இந்த வகையில் ஆர்யா மற்றும் சாய்ஷா ஜோடியையும் கூறலாம். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா.

   

தற்போது வரை தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் நடிகை சாயிஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

   

 

நடிகை சாய்ஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற படத்திலும் நடித்திருப்பார்.  இந்த படத்தின் போது இருவருக்கும் காதல் மலர பின்னர் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் அதிக அளவு வயது வித்தியாசம் இருக்கின்றது.

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும்போது அவருக்கு 38 வயது, சாய்ஷாவுக்கு 21 வயது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து காப்பான் மற்றும் டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்கள். இந்த தம்பதிகளுக்கு 2021 ஜூலை மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு பெரிய அளவில் திரைப்படங்களின் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தையை கவனித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படத்தில் ராவடி என்கின்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி இருந்தார். நடிகை சாய்ஷா சொந்தமாக youtube சேனல் ஒன்றை வைத்து அதில் தனது குடும்பத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கூறி வருகிறார்கள்.