நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வடிவேலு உள்பட சில நகைச்சுவை நடிகர்களோடு நடித்து பிரபலமானார். முக்கியமாக வடிவேலுவுடன் குசேலன் படத்தில் சோனா இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களில் சோனா கவர்ச்சியான கேரக்டர்களின் நடித்து வந்தார்.
இந்நிலையில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் மன்னார்குடி பளபளக்க என்ற பாடலுக்கு சோனா குத்தாட்டம் போட்டார். அதன் பிறகும் ஒரு சில திரைப்படங்களில் சோனா குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார். சோனா தயாரித்த திரைப்படங்கள் தோல்வி அடைந்தது. அதே நேரம் சோனாவிடம் இருந்து பலர் பணத்தை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சோனா சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலில் வில்லியாக நடித்தார். ஆனால் அந்த சீரியலில் இருந்தும் சோனா விலகிவிட்டார். சமீபத்தில் சோனா அளித்த பேட்டியில் கூறியது கூறியதாவது, சினிமாவில் கவர்ச்சி நடிகை என எனக்கு முத்திரை குத்திவிட்டார்கள்.
மன்னார்குடி பளபளக்க பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அந்த நேரம் எனக்கு தெரியவில்லை அதுதான் என் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறது என்று. எங்க போனாலும் கவர்ச்சி நடிகை என்றுதான் சொல்கிறார்கள். அதனாலேயே எனக்கு திருமணம் நடக்கவில்லை. நானும் சக பெண்களை போல வீட்டு வேலை செய்கிறேன் நடிப்பையும் செய்கிறேன். ஆனால் கவர்ச்சி நடிகை என்று குத்தப்பட்ட முத்திரையால் திருமணம் ஆகாமல் போய்விட்டது என சோனா கூறியுள்ளார்.