முன்னாள் உலக அழகி போட்டியாளர் திடீர் மரணம்.. கடைசி வரை கனவாகவே போன ஆசை.. அதிர்ச்சி சம்பவம்..!!

By Priya Ram

Published on:

உருகுவே நாட்டைச் சேர்ந்த ஷெரிக்கா டி அர்மாஸ் 2015-ஆம் ஆண்டு உலக அழகி போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கு 26 வயது தான் ஆகிறது. கடந்த 2 வருடங்களாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஷெரிக்கா கீமோதெரபி, ரேடியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்துள்ளார். சிறுவயது முதலில் மாடல் அழகியாக வேண்டும் என்பது ஷெரிக்காவின் கனவு.

   

அதனை நினைவாக்கும் முயற்சியில் சிறு வயதிலிருந்து அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். 2015-ஆம் ஆண்டு அழகி போட்டியில் கலந்து கொண்ட போது ஷெரிக்காவுக்கு 18 வயது தான். இந்தநிலையில் ஷெரிக்கா டி அர்மாஸ் கடந்த 13-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரது சகோதரர் மெய்க் டி அர்மாஸ் பகிர்ந்த சமூக வலைதள பதிவில், சிறிய சகோதரியை உயரே செல்லவும். எப்போதும், என்றென்றும் என பதிவிட்டார். அவரது மறைவிற்கு உருகுவேலின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களின் மிக அழகிய பெண்களில் ஒருவர் என கூறினார்.

மேலும் 2021-ஆம் ஆண்டுக்கான மிஸ் உருகுவே அழகியான லோலா டி லாஸ் சான்டோஷ் எனக்கு அளித்த அனைத்து அன்பு மகிழ்ச்சி இன்றளவும் என்னுடன் இருக்கிறது. அதற்காக எப்போதும் உங்களை நான் நினைவு கூறுவேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
Priya Ram