குடிக்கு அடிமையான காரணமே அதுதான்.. நான் ரொம்ப நல்லவ, பாவம் என்றெல்லாம் கதை சொல்ல மாட்டேன்.. நடிகை சோனா ஓபன் டாக்..!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்காகவே ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர்தான் நடிகை சோனா. அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், விஜயின் ஷாஜகான் படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துள்ளார். திடீரென்று தெலுங்கு திரை உலகிற்கு சென்ற அவர் சிவப்பதிகாரம் மற்றும் மிருகம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரும்பினார். இதில் மிருகம் படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்த கவனத்தைப் பெற்றார். தற்போதும் ஒரு சில படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. 'அட்ஜஸ்ட்மென்ட்  வேற லெவலுக்கு போயிருச்சு' - நடிகை சோனா

   

இந்நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில், அனைவரும் சொல்வது போல் நான் குடிப்பதற்கான காரணம் இதுதான் என்று சொல்லி நான் எஸ்கேப் ஆக விரும்பவில்லை. அந்த மாதிரி கதை எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது. தெரிஞ்சோ தெரியாமலோ அந்த விஷயத்தோடு சீரியஸ்னஸ் புரிஞ்சுகிட்டு அதை பண்ண. இந்த உலகத்துலயும் எனக்குள்ள இருக்கக்கூடிய சில பிரச்சனைகளை மறப்பதற்காகவும் நான் என்னுடைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத காரணத்தினாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற அந்த ஒரு விஷயத்திற்காக நான் குடிக்க ஆரம்பித்தேன்.

   

நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள்.. என்ன நடந்தது? - News18  தமிழ்

 

சினிமாவுல இருக்கக்கூடிய நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி என்ற கல்ச்சர் மத்தியில் குடி என்பது தொடங்கியது. என்னுடைய 25 வயசுல இருந்து 35 வயசு வரைக்கும் பார்ட்டி கிளப் என சுத்திட்டு இருந்தேன். யார் வாழ்க்கையில பார்ட்டி இல்லாம இருக்கு. எல்லோருமே பார்ட்டி பண்ண தான் செய்வாங்க. ஏன் என்னுடைய விஷயம் மட்டும் இப்படி பரவுகிறது என்றால் நான் கிளாமர் ஆர்டிஸ்ட் என்ற ஒரு காரணத்திற்காகத்தான்.

கவர்ச்சி நடிகை என்பது வலியைக் கொடுத்தது: சோனா ஹைடன் | actress sona interview  - hindutamil.in

இது உண்மையாலுமே நான் புரிஞ்சுகிட்டன். நீங்க எல்லாரும் பண்ற அந்த தப்பா தான் நானும் பண்ற. நான் ஒன்னும் புதுசா எதையும் பண்ணல. எல்லோரும் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு இடத்தில் தப்பு பண்ணி இருப்பாங்க. ஆனா அதையெல்லாம் மறைச்சிட்டு நான் ரொம்ப நல்லவ, ரொம்ப பாவம் என்று எல்லாம் நான் சொல்ல விரும்பல என்று சோனா வெளிப்படையாக பேசுகிறார்.