மாடர்ன் லுக்கில் கலக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா தேவி.. ரசிகர்களை கிறங்கடிக்கும் கிளிக்ஸ்..!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை வினுஷா தேவி.

   

சமூக வலைத்தளமான டிக் டாக்கில் டப்மாஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவர் திமிரு படத்தில் வெள்ளியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

   

 

தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த வினுஷா தேவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 40 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பனி விழும்  மலர்வனம் என்ற சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கை மற்றும் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையோடு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் மூலம் வினுஷா தேவி ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கிளாமரான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.