மொத்தமா என் சினிமா வாழ்க்கை அழிஞ்சதுக்கு காரணமே அதுதான்.. நடிகை கஸ்தூரி உருக்கம்..!

By Nanthini on பங்குனி 7, 2025

Spread the love

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  அதன் பிறகு சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, ஆகாயப் பூக்கள், கோலங்கள், இந்தியன், சுயம்வரம், தோஸ்த், வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கஸ்தூரி வழக்கறிஞர் படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

PHOTOS : பாவாடை தாவணியில் சின்ன பெண்ணாக மாறிய கஸ்தூரி.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. | Half Saree Pics Of Actress Kasthuri - Oneindia Tamil

   

அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்.அவர் தெரிவிக்கும் பல கருத்துகள் சர்ச்சைகளை உருவாக்குகின்றன. இதனால் அவருக்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் உருவாகியுள்ளன. அவர் என்ன கருத்து சொன்னாலும் அது உடனே கவனிக்கப்படுகிறது. அவருன் வெறுப்பாளர்கள் அவர் பற்றி என்ன கருத்து சொன்னாலும் அதை அசராமல் சமாளிக்கக் கூடியவர் கஸ்தூரி.

   

PHOTOS : யப்பா.. சைடு போஸில் அப்படியொரு லுக்.. சுண்டியிழுக்கும் நடிகை கஸ்தூரி.. ஏங்கவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Latest Glamour Pics Of Kasthuri - Oneindia Tamil

 

இப்படியான நிலையில் கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நடித்த லக் உண்மையிலேயே ஒரு சிறந்த திரைப்படம். நான் நடித்த முதல் படம் என்பது மட்டுமல்லாமல் நல்ல ஹிட் கிடைத்தது. அதேசமயம் எனக்கு தமிழிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் வெறும் எட்டு வருடங்கள் மட்டும்தான் நான் நடித்தேன். ஒரு சின்ன கிசுகிசு வந்ததால் வீட்ல என்ன நடிக்க வேணாம்னு அப்படியே மூட்டை கட்டிட்டாங்க. எனக்கு அப்போ வெறும் 20 வயசு தான்.

காத்து மேல காத்து கீழ!! 50 வயதில் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்... - விடுப்பு.கொம்

ஆனா என்னோடு கிசுகிசுக்கப்பட்ட அந்த நபருக்கு அப்போவே 60 வயசு இருக்கும். என்ன வச்சிருக்காரு, எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்து இருக்காரு, துபாயில் செட்டில் பண்ணிட்டாரு என கிசுகிசு வந்தது. யாருமே இதை கேள்விப்படல. ஆனா எங்கேயோ பார்த்த ஒரு நல்ல ஆத்மா எங்க வீட்டுல வந்து பத்த வச்சிரு. அத்தோட மொத்தமும் முடிஞ்சது. நடிப்பெல்லாம் வேண்டாம்னு சொல்லி பேக்கப் பண்ணிட்டாங்க என்று கஸ்தூரி வருத்தத்துடன் பேசி உள்ளார்.