Categories: சினிமா

என்னது, நானும் பிரேம்ஜியும் லவ் பண்ணோமா?.. பிரிவுக்கு காரணம் அந்த தயாரிப்பாளரா?.. நடிகை சோனா ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.

அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில்  பிரேம்ஜி பற்றியும் தன்னைப் பற்றியும் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், பிரேம்ஜியும் சோனாவும் காதலித்தார்கள், ஆனால் தயாரிப்பாளர் சிவா அவர்களை பிரித்தார் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது முற்றிலும் தவறான செய்தி தான். அந்தக் கதைகள் எதுவுமே உண்மை கிடையாது. எங்களுக்குள் அப்படி எந்த ஒரு தொடர்பும் இல்லை. இப்படி ஒரு பேச்சு எங்கிருந்து வந்தது என்பதை எனக்கு தெரியவில்லை. என்னை வேண்டுமென்றே இவற்றில் இழுத்து விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் பிரேம்ஜி ஒரு வயதான குழந்தை மாதிரி. நாங்கள் நல்ல நண்பர்கள். யாரும் வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம். பிரேம்ஜியும் நானும் காதலிப்பதாக வந்த செய்தியை நாங்கள் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே பிரேம்ஜி சிரித்து விட்டு எனக்கு போன் செய்து சொன்னான்.

நீங்க இதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்காதீங்க பேசுறவங்க பேசிக்கிட்டு இருக்கட்டும் நம்மள பத்தி நமக்கு தெரியும் என்று சொன்னான். அது மட்டுமல்லாமல் அவனுக்கு கல்யாணம் நிச்சயமாக இருந்த சமயத்தில் இது போன்ற செய்தி உலா வந்ததால் எனக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. அப்போ பிரேம்ஜி இதுல என்னுடைய மனைவிக்கும் எந்த கவலையும் இல்லை எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல நீங்களும் இத பத்தி கவலைப்படாம ஃப்ரீயா இருங்க என்று சொன்னான். நாங்க மிகவும் நெருங்கிய நண்பர்கள். மற்றவர்கள் தான் இப்படி தேவையில்லாத வதந்தியை பரப்பிட்டு இருக்காங்க என்று சோனா விளக்கமளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

7 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

7 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

7 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

8 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

8 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

8 மணத்தியாலங்கள் ago