Categories: சினிமா

பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்திய இயக்குனருடன் கைகோர்க்கும் SK.. எட்டமுடியாத உயரத்துக்கு செல்லும் பராசக்தி ஹீரோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்தே சிவ கார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராசி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் மதராசி திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயர்க்கும் நிலையில் பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகின்றார்.

மதராசி திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு எழுவது சதவீதம் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் திடீரென்று ஏ ஆர் முருகதாஸுக்கு சல்மான்கானை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் அவரை வைத்து சிக்கந்தர் என்ற திரைப்படத்தை இயக்க செல்ல மறுப்பக்கம் சிவக்கார்த்திகேயன் பராசக்தி படபிடிப்பில் இணைந்து விட்டார். இதனைத் தொடர்ந்து விரைவில் மதராசி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பிரபல மலையாள இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர்தான் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. முதலில் இவர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் வேல்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்தக் கூட்டணி பற்றி அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்நிலையில் தற்போது ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் பிரபல முன்னணி ஹீரோவான ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி திரைப்படத்தில் முன்னணி ஹீரோவான ரவி மோகன் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ…என்னை யாராவது காப்பாத்துங்க… உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தனியாக… ஓடிய 8 வயது குழந்தை… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ…!

டெக்னஸிலுள்ள பெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று, எட்டு வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன்…

10 minutes ago

திக் திக் திக்… மாணவியை வகுப்பறை வெளியே… கத்தியால் குத்திய 14 வயது மாணவன்… பாலேவாடி தனியார் பள்ளியில் பரபரப்பு… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பாலேவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்கு வெளியே மற்றொரு…

29 minutes ago

அட கொடுமையே… கணவனின் உடலை துண்டு துண்டாக்கி… சிமெண்ட் பேரலில் அடைத்த மனைவி… மரண தண்டனையை எதிர்த்து… உயர் நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்…!

மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…

49 minutes ago

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

10 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

10 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

10 மணத்தியாலங்கள் ago