2000 ஆம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை சினேகா. 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பக்சி என்ற மலையாள மொழி திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட துறையில் அறிமுகமானார். புன்னகை அரசி என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட சினேகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருடைய குடும்பப் பாங்கான முகத்தோற்றத்திற்காகவும் நடிப்பு திறனுக்காகவும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் இருவரும் பிசியாக இருந்து வருகிறார்கள். திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்ட சினேகா அதன்பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வந்த சினேகா இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சினேகா தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களிலும் தொடர்ந்து பயணித்து வருகிறார். இப்படியான நிலையில் நடிகை சினேகா சொந்தமாக சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடை ஒன்றைக் கடந்த ஆண்டு தொடங்கினார். தற்போது அந்தக் கடை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க