சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் மற்றும் இயக்குனரான மாரிமுத்து. இவர் சீமானோடு இணைந்து துணை இயக்குனராக பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதை எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த சீரியலில் இவர் நடித்த குணசேகரன் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.

இப்படியான நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் நடிகர் மாரிமுத்து வடிவேலு பற்றி பேசிய ஒரு பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வடிவேலுவின் அனைத்து காமெடிகளும் நான் எழுதியது தான். அவருக்கு காமெடி எழுதுவது எனக்கு நன்றாகவே வரும். அவரை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது.

இந்திரலோகத்தில் அழகப்பன் படம் முடிந்த கையோடு அவரிடம் நான் ஒரு கதையை கூறினேன். அதாவது ஒரு கிழவி பேரன். இதில் கிழவியாகவும் பேரனாகவும் வடிவேலு இரட்டை வேடத்தில் நடிப்பார். தியேட்டரே அள்ளும் அளவுக்கு அத்தனை காமெடிகளும் அருமையாக இருக்கும். கத்தி முனையில் கருப்பு சிங்காரம் என்பது தான் படத்தின் டைட்டில். இதில் வடிவேலு பேர்தான் சிங்காரம். படத்தின் கிளைமாக்ஸ் இல் கிளவியும் பேரனும் இறந்து விடுவார்கள். படம் ஃபுல்லா நல்லா காமெடியா போயிட்டு இறுதியில் ஒரு எமோஷனலாக காட்சி உடன் படம் முடிவடையும். வெங்கட் மாணிக்கம் அவர்களிடம் கேட்டுவிட்டு கல்பாத்தியில்தான் படம் பண்ண முடிவு செய்தோம். ஆனால் சில சம்பளப் பிரச்சனை காரணமாக வடிவேலு இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. ஒரு கோடி அட்வான்ஸ் கூட வாங்கிட்டாரு.

பிறகு அந்த பணத்தை தான் கல்பாத்தியில் தெனாலிராமன் படம் பண்ணுவதற்காக பயன்படுத்தினாங்க. வடிவேலு உண்மை இல்லையே நல்ல காமெடி தெரிந்த ஒருவர். காமெடியில் உள்ள அனைத்து நுணுக்கங்களும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு திறமையான அவர் இன்று ஒன்றுமே தெரியாத மக்காக மாறிவிட்டார். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. நாங்க எல்லோரும் ஆபீஸ்ல இருக்கும்போது தொடர்ந்து சிரிக்க வச்சுட்டே இருக்கக்கூடிய அவரு நாய் சேகர் படம் நடிக்கிற அளவுக்கு போயிட்டாரு. ஏன் அப்படி போயிட்டாரு என்று தெரியல.

மீண்டும் வடிவேலு வந்து தமிழ் சினிமாவை ஆளக்கூடிய அளவுக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அத்தனை திறமையும் அவர்கிட்ட இருக்கு. ஜெயிச்ச மாமதை தான் அவர் கிட்ட இருக்கு. அதை ஓரம் கட்டிட்டு சம்பள பிரச்சனை எல்லாத்தையும் விட்டுட்டு திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்து மக்களிடம் தன் முகத்தை மீண்டும் பழகி சினிமாவில் அவர் தன்னை ஒரு ஆளாக நிறுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என மாரிமுத்து பேசிய பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
