சின்னப்பொண்ணு வேண்டாம் என ரிஜெக்ட் செய்த பாரதிராஜா… பின்னாளில் தன்னை தேடி அலைய வைத்த சில்க் ஸ்மிதா..!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

இந்திய சினிமாவில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்ட பல திறமைகளை வைத்து இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் தான் சில்க்ஸ்மிதா. நடிகை சொர்ணம் என்பவரிடம் டச் ஆஃப் கேர்ள் ஆக இருந்த விஜயலட்சுமி என்ற பெண் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு வினோத் சக்கரவர்த்தி தயாரித்த வண்டி சக்கரம் என்ற திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் நடிகை ஆக அறிமுகமானார். இந்தப் படம் தான் அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயரை பெற்றுத்தந்தது. முதல் படத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இரண்டாவது படமாக வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிகர் தியாகராஜனின் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றின் 2ம் பாகம் வெளியாகிறதா? - நாயகி யார் தெரியுமா? | Silk smitha biography part 2 released do you know who the heroine is - kamadenu tamil

   

அதன் பிறகு ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் பல படங்களில் கவர்ச்சி கேரக்டரிலும் ஒரு பாடலுக்கு நடனமாடும் டான்ஸ் ஆகவும் நடித்திருப்பார். முன்னணி இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் சில்க் ஸ்மிதா இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிந்த இந்திய மொழிகளில் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில்க் ஸ்மிதா வெற்றியை கொடுத்துள்ளார்.

   

Silk Smitha Real Life Story In Tamil,ஏழ்மை, இளம் வயதில் திருமணம், கணவர் வீட்டார் சித்திரவதை...சில்க் ஸ்மிதாவின் கண்ணீர் பக்கங்கள்! - silk smitha biography unknown life facts ...

 

முதலில் பாரதிராஜா படத்தில் தான் சில்க் ஸ்மிதா அறிமுகமாக இருந்தார். 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் தான் ஒட்டபெட்டவர். இந்தப் படம் தான் சில்க் ஸ்மிதா சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் வெளியான அதே ஆண்டில் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் புதிய வார்ப்புகள் திரைப்படம் வெளியானது. பாக்யராஜ் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் ஒரு பூ விற்கும் பெண் கேரக்டரில் நடிக்க முதலில் சில்க் ஸ்மிதாவை தான் தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அவரை ஆபீசுக்கு அழைத்து வந்து போட்டோ சூட் எடுத்துள்ளனர். பிறகு மிகவும் சின்ன பொன்னாக இருக்கிறார் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்க மாட்டார் என்று கூறி அவரை வேண்டாம் என பாரதிராஜா கூறியுள்ளார்.

தொடர்ந்து அறை வாங்கிய சில்க்... அவரின் பல நாட்கள் ஆசையை நிறைவேற்றிய பாரதிராஜா...

ஆனால் பிறகு வேறு படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது அந்த கண்ணில் காந்தம் இருக்கு என்று பாரதிராஜா கூறியுள்ளார். அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு வண்டி சக்கரம் படத்தில் தமிழில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அடுத்த ஆண்டை அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக தியாகராஜின் மனைவியாக நடிக்க இவர்தான் வேண்டும் என்று பாரதிராஜா அவரை அழைத்து வருமாறு மனோபாலா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் சில்க் ஸ்மிதா வீட்டை கண்டுபிடித்து அவரை அழைத்து வந்துள்ளனர்.