அந்தப் படத்துக்கு இன்னைக்கு வரைக்கும் சல்லி பைசா கூட சம்பளம் தரல.. நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை…!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் நடிகராக அறிமுகமானவர்தான் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு ஒரு பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதிலும் முதல் படத்திலேயே இளம்பெண்களின் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஒரு பிளேபாயாக, லவ்வர் பாயாக ஜொலித்து வந்த ஸ்ரீகாந்த் தொடர்ந்து மனசெல்லாம் என்ற படத்தில் மீண்டும் தன்னுடைய நடிப்பை நிரூபித்தார். ஒரு காதலன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கதாபாத்திரத்தில் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து அவருக்கு சொல்லும் படியாக எந்த பட வாய்ப்புகளும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

போதைப்பொருள் விவகாரம்.. மாட்டிக்கொடுத்த GPay.. நடிகர் ஸ்ரீகாந்த் கைது! |  Madras Mixture-Tamil news portal

   

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் என்ற திரைப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகும் ஸ்ரீகாந்துக்கு எந்த படங்களும் பெரிதாக வரவில்லை. இப்படியான நிலையில் சமீபத்தில் ஸ்ரீகாந்த் போதை பொருள் விவகாரத்தில் போலீசில் மாட்டிக் கொண்டார். தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் இவருடைய பேச்சு தான் அதிகமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான நிலையில் ஸ்ரீகாந்த் மனசெல்லாம் திரைப்படம் குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மனசெல்லாம் படத்தில் ஒரு தீ விபத்தில் மாட்டிக் கொண்டேன். அப்போது முகத்தில் நெருப்புப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

   

Watch Manasellam (Tamil) Full Movie Online | Sun NXT

 

கொஞ்சம் கொஞ்சமா உடல்நிலை சரியாகி வந்த சமயத்தில் மனசெல்லாம் தயாரிப்பாளரின் இன்னொரு முகம் வெளிவந்தது. அவர் அந்த சமயத்துல கூட என்னோட படத்துல நடிச்சு கொடுத்துட்டு தான் நீ வேற அவங்க படத்துல நடிக்கணும் என்று சொல்லிட்டாரு. அந்தப் படத்துக்கு இன்னைக்கு வரைக்கும் எனக்கு சம்பளமே தரல. அந்த சமயத்துல எங்க அப்பா இருந்த எல்லா பணத்தையும் எடுத்து அட்வான்ஸ் வாங்குன எல்லா இயக்குனர்கள் கிட்டயும் கொடுத்தாரு. பிஎஃப் படம் உட்பட மொத்தத்தையும் எனக்காக அங்கு செலவு பண்ணாரு. அதை என்னால எப்பவுமே மறக்க முடியாது. அந்த சமயத்துல தான் ஆயுத எழுத்து படத்திற்காக மணிரத்தினம் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து இருந்தாரு. அப்போ நடிக்க முடியாமல் போனதால் அவர்கிட்ட வாங்கின அட்வான்ஸ்சையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது என்று ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.